அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 11 ஆகஸ்ட், 2010

இவ்வருட போட்டிகளிலிருந்து உசைன் போல்ட் விலகல்

லகின் அதிவேக ஓட்டவீரான உசைன் போல்ட், இவ்வருடத்தில் இனிமேல் போட்டி எதிலும் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகில் ஏற்பட்ட காயமே இதற்கான காரணம்
.ஜமைக்காவைச் சேர்ந்த 23 வயதான உசைன் போல்ட், கடந்த 6 ஆம் திகதி சுவீடனில் நடைபெற்ற டயமன்ட் லீக் தொடரின் போட்டியொன்றில் சக நாட்டவரான டைசன் கேயிடம் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே தான் அடுத்த வருடம் வரை போட்டிகளில் பங்குபற்ற போவதில்லை என உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
"2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் பல முக்கிய போட்டிகள் நடைபெறவுள்ளன. அப்போட்டிகளில் முழு ஆரோக்கியத்துடன் பங்குபற்ற விரும்புகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த வருடம் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்க்கிறேன்" என தற்போதைய ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியனான உசைன் போல்ட் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG