அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 11 ஆகஸ்ட், 2010

யுத்த முடிவுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பும் அளப்பரியது : பிரதமர்

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏனைய மக்களுடன் இணைந்து இலங்கை முஸ்லிம் மக்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர் என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் அங்கத்தவர்களைச் சந்தித்து உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம்கள் என்றும் நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த போராடியவர்கள் என்றும் இன்று வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அச்சமின்றி வாழக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இவ்வைபவத்தில் உரையாற்றிய உலமா சபைத்தலைவர் றிஸ்வி முப்தி தெரிவிக்கையில்,
"இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் சமாதானத்துக்கும் முஸ்லிம்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். முஸ்லிம் மக்களின் நல்லாசி என்றென்றும் அரசுக்கும் நாட்டின் தலைவர்களுக்கும் உண்டு" என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG