இலங்கைக் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியான துலிப் மெண்டிஸ், அப்பதவிலிருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக அவர் இப்பதவியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரின் வயதைக் கருத்திற்கொண்டு அப்பதவியிலிருந்து ஓய்வு பெறுமாறு இலங்கைக் கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாகம் கோரியுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி தனது 58 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ள துலிப் மெண்டிஸ், கிரிக்கெட் உலகில் மிக சிரேஷ்ட பிரதம நிறைவேற்று அதிகாரியாக விளங்குகிறார்.
இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான துலிப் மெண்டிஸ், அணித்தலைவராக பதவி வகித்தபோதே 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் இந்திய அணியை 196 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.
இலங்கை அணி முகாமையாளர் பயிற்றுநர், இலங்கைக் கிரிக்கெட் சபையின் பதில் தலைவர் உட்பட பல பதவிகளை அவர் வகித்துள்ளார்.
சென். செபஸ்தியன் கல்லூரி, சென் தோமஸ் கல்லூரி ஆகியனவற்றின் பழைய மாணவரான துலிப் மெண்டிஸ், பாடசாலை அணிகளுக்கும் தலைமை தாங்கியுள்ளார். பாடசாலையில் கற்றும் காலத்திலேயே அவர் இலங்கை அணிக்காக விளையாட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக