அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

திருமலை நகரசபைத் தலைவர் த.தே.கூட்டமைப்பிலிருந்து நீக்கம்

தி திருகோணமலை நகரசபைத் தலைவர் சன்முகராஜா கௌரி முகுந்தன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவிடமிருந்து தனக்கு கடிதம் கிடைத்துள்ளதாக கௌரி முகுந்தன் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். அதேவேளை தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டதன் காரணமாகவே கௌரி முகுந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமலை நகரசபைக்கான தேர்தலில் த.தே.கூ. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்னர் அந்நகரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG