தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் இன்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவை சந்தித்துப் பேசவுள்ளனர்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே கைதிகளின் பெற்றோர்கள் வாசுதேவ நாணயக்கார எம்.பி.யை சந்திக்கவுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கடந்த பல மாதங்களாக கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட பலருக்கும் அவர்கள் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக