அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

யாழ். மாவட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார்.

யாழ். மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களான ஐ.நா உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இன்று முற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இருபத்தியெட்டு பிரதிநிதிகளும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் இருபத்தியிரண்டு பிரதிநிதிகளும் பங்குகொண்டனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சரவர்கள் மக்கள் நலன் சார்ந்த சேவைக்கு கூடிய பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவையானது தற்சமயம் எமது மக்களுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றது. மக்களின் சகல தேவைகளையும் அரசாங்கத்தினால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது. அரசாங்கத்தின் உதவிகள் கிட்டாத மக்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தமது சேவைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். மக்களின் தேவைக்கு கூடிய பங்களிப்பினை வழங்குங்கள். அதற்கு எனது ஆதரவு என்றும் உண்டு. கடந்த காலத்தில் எதிர்ப்பரசியலின் காரணத்தினால் நாம் பல வாய்ப்புக்களை இழந்து விட்டோம். எமது மக்களுக்குத் தேவையான உதவிகள் உரிய முறையில் போய்ச் சேர வேண்டும். அதற்காக பாடுபடுங்கள் எனக்கேட்டுக்கொண்டார்.
யாழ். மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தன்னார்வ தொண்டுநிறுவனங்களுடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேற்படி சந்திப்பின்போது அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் சர்வதேச தொடர்பாளர் மித்திரன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

BATTICALOA SONG