வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010
படையினர் பயணித்த பஸ் வவுனியாவில் விபத்து!
இலங்கைப் படையினருடன் பயணித்த பஸ் வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 21 சிப்பாய்கள் காயமைடைந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றுகொண்டிருந்த படையினர் பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிப்பாய்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகவும் பஸ்ஸின் அதிகரித்த வேகம் காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக