அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

சுகாதார அமைச்சு உள்நாட்டு பற்றீரியாவுக்கு அனுமதி கோரவில்லை

லங்கையில் உற்பத்தி செய்யப்படும் பீ.ரீ.ஐ பற்றீரியாவை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி கோரவில்லை என பயோ பவர் லங்கா நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.


சுகாதார அமைச்சு அனுமதி வழங்குமாயின் இரு வாரங்களுக்குள் 10 ஆயிரம்; லீட்டர் பற்றீரியாவை உற்பத்தி செய்து தரமுடியும் என பயோ பவர் லங்கா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,
“இதுவரை இதற்கான அனுமதி வழங்கப்படாமையினால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பீ.ரீ.ஐ பற்றீரியாவை உற்பத்தி செய்ய முடியாதுள்ளது” என தெரிவித்தார்.
இதுகுறித்து சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி நிமல்கா பன்னிஹெட்டியிடம் நாம் தொடர்புகொண்டு கேட்டோம்.
“கியூபாவிலிருந்து பீ.ரீ.ஐ பற்றீரியாவை தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளோம். அதனால் பயோ பவர் லங்கா நிறுவனத்திடமிருந்து பற்றீரியாவை பெறுவதற்கு அனுமதி கோரவில்லை. இனிவரும் காலங்களில் பயோ பவர் லங்கா நிறுவனத்திடமிருந்து பற்றீரியாவை கொள்வனவு செய்யவுள்ளோம்” என அவர் தெரிவித்;தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG