அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவதில் புதிய உலக சாதனை

பொது இடங்களில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையானோர் தாய்ப்பாலூட்டுவதில் நியூஸிலாந்து பெண்கள் நேற்றுமுன்தினம் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.


தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நியூஸிலாந்தின் பல நகரங்களில் ஷொப்பிங் சென்டர்கள் பலவற்றில் பெண்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டினர்.
இந்நிகழ்வில் மொத்தமாக 1474 பெண்கள் கலந்துகொண்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே போன்றதொரு நிகழ்ச்சியில் 1306 பேர் தாய்ப்பாலூட்டியமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனை ஜுலி சேய்மரும் இம்முறை நிகழ்வில் கலந்துகொண்டார்.
பொது இடங்களில் தாய்ப்பாலூட்டும் போது சௌகரியமாக உணர்வதற்கு இந்நிகழ்ச்சி வழி வகுக்கும் என நம்புவதாக சேய்மர் கூறினார்.
"இன்றைய உலகில் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவது கடினமானதாக மாறி வருகிறது. குறிப்பாக, இளம்தாய்மார்கள் மிக சங்கடமடைகின்றனர். சவால்களுக்கு மத்தியிலும் பொது இடங்களில் தாய்ப்பாலூட்டப்படுவது ஊக்குவிக்கப்பட வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
ஒரு தடவை வீட்டுப்பாவனைப் பொருள் விற்பனை நிலையமொன்றில் தான் தனது மகனுக்கு தாய்ப்பாலூட்டிக் கொண்டிருந்தபோது பாகாப்பு ஊழியர் ஒருவர் தன்னை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதாக இந்நிகழ்வில் கலந்துகொண்ட பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG