வட பகுதியில் மீள் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசியல் தீர்வு ஒன்றையும் அரசாங்கம் வழங்குமென்று நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமென்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் அதனை வழங்க ஜனாதிபதி தயாராக இருக்கிறாரென்றும் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தனி ஈழத்தைத் தருவதற்கு எவரும் இணங்கமாட்டார்கள். ஆனால் தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றை வழங்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஜனாதிபதியும் அதற்குத் தயாராக இருக்கிறார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறாரென்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக