திருகோணமலையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியொன்றில் கல்வி பயிலும் தரம் 6 மாணவிகள் இருவர் இன்னமும் வீடு திரும்பவில்லை என திருகோணமலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறைக்காக இன்று மூடப்பட்ட நிலையில், பரீட்சைகள் முடிந்து பெறுபேற்று அட்டைகளுடன் வீடு செல்ல வேண்டிய இவர்கள் இன்னமும் வீடு போய் சேரவில்லை.
பாடங்களில் மிகக்குறைந்த புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதால் ஏற்பட்ட அச்சம் காரணமாக இவர்கள் வீடு செல்லாமல் இருக்கலாம் என பாடசாலை தரப்புகள் தெரிவித்தன. இச்சம்பவத்தின் காரணமாக திருகோணமலை நகரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
குறித்த கல்லூரியில் கழுத்துக்குட்டை (ரை) அணிந்த இரண்டு சிறிய பிள்ளைகள் வவுனியா பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் நின்றதை தனது மகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும்போது கண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக அதிபருக்கு பெற்றறார் ஒருவர் தெரியப்படுத்தியிருந்தார். அவர்கள இச்சிறுமிகளை மாலை 5.00மணியளவில் கண்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இம்மாணவிகள் இதுவரை வீடுதிரும்பவில்லை
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக