அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பிக்குகளின் அரசியல் பிரவேசத்தில் உடன்பாடில்லை - மேர்வின் சில்வா

பௌ த்த மதகுருமார்கள் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்க கூடாது என்பது தன்னுடைய அபிப்பிராயம் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மெர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் நாடாளுமன்றத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் பௌத்த மதகுருமார்களுக்கான மதிப்பும் கௌரவமும் இழக்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரசியல் ஈடுபாடு இல்லாதவர்களாகவோ, அல்லது எந்தவித அரசியல் பின்னணி இல்லாதவர்களாக இருந்தாலும் கூட சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டுத் துறையுடன் தொடர்புடையவர்கள் அரசியலுக்கு பிரவேசிப்பதென்பதை தான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆயினும், பௌத்த மதகுருமார்களை நாடாளுமன்றத்தில் காணும் போது தான் அதிருப்தியடைவதாக பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். மதகுரு ஒருவருடன் பேசும் போது ஒருவர் எழுந்து நிற்பதும், தலைவணங்கி நிற்பதும் வழமையாகும். ஆயினும், நாடாளுமன்றத்தில் இவ்வாறு நிகழ்வதில்லை.
நாடாளுமன்றத்தினைப் பொருத்தவரையில், மதகுரு ஒருவர் சாதாரண நபரொருவருக்கு சமமாகவே கருதப்படுகின்றார் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG