அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி யாழ் நோக்கி சென்ற இந்திய பிரஜை கைது

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்திய பிரஜையொருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்நிலையில், குறித்த இந்திய பிரஜையை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மூலமாகவே குறித்த இந்திய பிரஜை யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். வவுனியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG