அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

மக்கள் நலனை ஒரே நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். மகேஸ்வரி நிதிய பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மக்கள் பணியாற்றிவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் மகேஸ்வரி நிதியத்தின் வடபிராந்திய தலைமைப் பணிமனைக்கு விஜயம் செய்து பணியாளர்களுடன் கலந்துரையாடினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பணியாளர்களின் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மகேஸ்வரி நிதியமானது அரசசார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் என்ற வகையில் மக்கள் நலன்சார்ந்த பணிகளை ஒரே நோக்காகக் கொண்டு ஊழியர்கள் சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் மகேஸ்வரி நிதியத்தின் தற்போதைய வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலப் பணிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது மகேஸ்வரி நிதியத்தின் ஆலோசகர் மித்திரன் இயக்குனர் த.ரஜீவ் கணக்காளர் கௌரி உட்பட ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.



0 கருத்துகள்:

BATTICALOA SONG