அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

சச்சின்- மேலும் ஒரு சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் அதிக அளவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் எட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கு பெறும் 169 ஆவது டெஸ்ட் போட்டியாகும். ஆஸ்திரேலியாவின் ஸ்டிவன் வாவ் 168 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை இலங்கையின் ஜெயசூர்யாதான் 444 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சச்சின் 442 போட்டிககளில் ஏற்கனவே பங்கேற்றுள்ள நிலையில் அந்த சாதனையையும் அவர் தட்டிப் பறிக்கும் தூரத்தில்தான் உள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களையும், அதிக அளவிலான சதங்களையும் அடித்த சாதனை வீரராக இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
டெஸ்ட் போட்டிகளில் 13,742 ரன்களையும், ஒரு நாள் போட்டிகளில் 17,598 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.
 

0 கருத்துகள்:

BATTICALOA SONG