மட்டக்களப்பு நகரில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து வந்த மங்களராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இன்று வெள்ளிக்கிழமை மாலை தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
புத்தசாசன பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன இன்று மாலை உண்ணாவிரதமிருந்த தேரோரை நேரடியாக சந்தித்து வழங்கிய உறுதி மொழியை அடுத்தே உண்ணாவிரதத்தை அவர் நிறைவு செய்தார்.
அம்பிட்டிய சுமனரத்தின தேரர் முன்வைத்த ஏழு அம்சக் கோரிக்கைகளையும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நிறை வேற்றித்தருவதாக பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன தேரருக்கு இதன் போது உறுதிமொழி வழங்கினார்.
இதேவேளை, அடுத்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தேரர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் பிரதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக