அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் வெடிபொருட்கள்

வுனியா மாவட்ட நீதிமன்ற வளவினுள் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா தெரிவித்தார்
.நீதிமன்ற வளவில் உள்ள மரப்பலகைக்கு கீழே உரப்பை ஒன்றில் இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். கைத்துப்பாக்கி, அதற்குரிய ஒரு தொகை ரவைகள், கிளேமோர் குண்டுகள் போன்றன இதில் அடங்கியிருந்தன.
வழக்குகளின் தடயப் பொருட்களாக, வெடி பொருட்கள் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற களஞ்சியசாலையில் வைக்கப்படுவது வழக்கம். எனினும், அப்பொருட்கள் யாவும் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள், நீதிமன்ற விடுமுறை காலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியர்கள் சிலரிடமிருந்தும் கடமையில் இருந்த பொலிஸாரிடமிருந்தும் வாக்கு மூலங்களும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG