சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்ட தணுன திலகரட்னவின் தயாரான அசோக்கா திலகரட்னவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்தது.
தணுன திலகரட்ன, ஜெனரல் சரத் பொன்கோவின் மருமகனாவார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தணுன திலகரட்னவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட அசோக்கா திலகரட்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டபோது, ஒரு கோடி ரூபா சரீரப் பிணையிலும் 10 லட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார். எதிர்வரும் டிசெம்பர் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக