அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

செல்ஷியா கிளிண்டன் திருமண வாழ்வில் இணைந்தார்


 மெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டன், தற்போதைய அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஹிலாரி கிளிண்டன் தம்பதிகளின் ஏக புதல்வியான செல்ஷியா கிளிண்டன் தனது நீண்டகால காதலரான மார்க் மேஸ்வின்ஸ்கியை நேற்று மாலை திருமணம்செய்தார்.
நியூயோர்க்கின் ஹட்சன் நதியோரத்திலுள்ள அஸ்டன் கோர்ட்ஸ் எனும் எஸ்டேட் ஒன்றில் இத்திருமணம் நடைபெற்றது.  அல்பிரைட் உட்பட சுமார் 500 விருந்தினர்கள் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.
"அஸ்டர்கோர்ட்டில் செல்ஷியாவும் மார்க்கும் திருமண பந்தத்தில் இணையும்போது மிக அழகிய திருமண வைபவத்தை நாம் பெருமையுடனும் மிகுந்த உணர்ச்சிபூர்வமாகவும் நாம் கண்டோம். மார்க் எமது குடும்பத்தில் இணைந்துகொள்வதை நாம் வரவேற்கிறோம்" என பில் கிளிண்டனும் ஹிலாரி கிளிண்டனும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
மார்க் மேஸ்வின்ஸ்கி பென்சில்வேனியாவின் முன்னாள் செனட்டர் மோர்கலிஸ் மேஸ்வின்ஸ்கின் மகனாவார். தற்போது நிதிநிறுவனமொன்றில் அவர் பணியாற்றுகிறார். செல்ஷியாவும் (30) மார்க் மேஸ்வின்ஸ்கியும் (32) பதின்மர் பருவத்திலிருந்து நண்பர்கள். இருவருமே ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள்.
இத்திருமணத்திற்கான ஏற்பாடுகள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்திருமணத்தையொட்டி அஸ்டன்கோர்ட் பகுதியில் ஞாயிறு அதிகாலை 3.30 மணிவரை விமானங்கள் பறப்பதற்கு அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். பல வீதிகளும் மூடப்பட்டன. சங்கடத்திற்குள்ளான அயலவர்களுக்கு; வைண் போத்தல்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG