அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

அமரர் அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை குடும்பத்தாருக்கு ஆறுதல்!


 ழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தையார் இயற்கை மரணம் அடைந்ததை அடுத்து நவாலியிலுள்ள அவரது வீட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

தோழர் மித்திரனின் தந்தையார் அந்தோனிப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்கள் கடந்த 26ம் திகதி இயற்கை மரணம் எய்தியிருந்தார்.
அச் சமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொழும்பில் நின்றிருந்த காரணத்தினால் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத நிலையில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்டின் உதயன் அமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ராஜ்குமார் ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் தோழர் ஸ்ராலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கொழும்பிலிருந்து இன்று யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அமைச்சர் அவர்கள் தோழர் மித்திரனின் வீட்டுக்குச் சென்று பிரிவால் துயருற்று இருக்கும் அன்னாரின் மனைவியான திருமதி லுர்த்தம்மா மரியாம்பிள்ளை அவர்களுக்கும் அன்னாரின் உறவினர்களுக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.


0 கருத்துகள்:

BATTICALOA SONG