அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு

கி ளிநொச்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையின் போது பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்களை மீட்கப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவை திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் கிளைமோர் குண்டுகள் - 38, கைக்குண்டுகள் - 45, சி - 4 ரக வெடிமருந்து 50 கிலோ, ஆர்.பி.ஜி. குண்டுகள் 90 போன்றன காணப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்களை கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எடிசன் குணதிலக, திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் ரத்மலவின்ன பண்டார, திருமலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் சரித்த ஏ.வி.ஜசுந்தர ஆகியோர் பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG