அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

"சியத்த" மீது தாக்குதல்; சந்தேகநபர்களை உடன் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவு

"வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்" நிறுவனம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டது.

அத்துடன், சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையினை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
கடந்த வாரம், குறித்த நிறுவனத்துக்குள் உட்புகுந்த முகமூடியணிந்த ஆயுததாரிகள் சிலர் அங்கிருந்த சொத்துக்களை உடைத்து சேதப்படுத்தியதுடன் நிறுவனத்தின் செய்திப் பிரிவில் கடமையாற்றி வந்த இரு ஊழியர்களையும் கடுமையாகத் தாக்கினர்.
இருப்பினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதான சதேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் சம்பவத்தின் போது முகமூடி அணிந்திருந்தமையினால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கோட்டை நீதிவானிடம் மேலும் கூறினர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG