தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டிய தாயொருவர் தானும் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த தாயின் ஒரு பிள்ளை உயிரிழந்ததுடன் மற்றைய பிள்ளையும் தாயும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது 5 வயதான ரோஜா என்ற தமிழ் சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10 வயதுடைய சிறுவன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நாவுல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 7 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக