அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 ஜூலை, 2010

மலேசியாவில் இலங்கையர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு

இரு வாரங்களுக்கு முன்னர் ஜூலை 14 ஆம் திகதி நள்ளிரவில் உணவக முகாமையாளரான 29 வயதான அன்சன் ஹேமதிலக அன்சன் அல்பேர்ட் என்பவரைக் கொலை செய்ததாக தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் ஒருவர் மற்றும் இரு இலங்கைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு எதிராக மலேசிய நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகேந்திரன் பிள்ளை (39), ஜெயரூபன் (27) மற்றும் சிவ ஐங்கரன் (22) ஆகிய இலங்கைத் தமிழர்கள் மீதே இக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றப்பத்திரிக்கை இவர்களுக்கு விளங்கும்படியாக தமிழ் மொழியிலும் வாசித்துக் காட்டப்பட்டது.
குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்ரம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மலேசியச் சட்டப்படி இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. _

0 கருத்துகள்:

BATTICALOA SONG