அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 ஜூலை, 2010

கொழும்பு துறைமுகத்தில் கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல்

கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

"வாங் ஜியோன்" என்ற போர்க்கப்பலே இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலயம் தெரிவித்தது.
கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஊடக மத்திய நிலையம், குறித்த கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் நிலையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கூறியது.
சுமார் 149 மீற்றர் நீளமுடைய இந்தப் போர்க்கப்பல் துருப்புக்களைத் தரையிறக்கும் வகையைச் சேர்ந்ததாகும். 42 அதிகாரிகள் மற்றும் 264 கடற்படை வீரர்கள் பணியாற்றும் இந்தப் போர்க்கப்பல் படையினரைத் தரையிறக்கும் கலங்களைக் கொண்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த கொரிய குடியரசின் போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளித்தனர்.
அத்துடன், இந்தக் கப்பலை வரவேற்பதற்காக இலங்கையில் வதியும் 100க்கும் மேற்பட்ட கொரிய பிரஜைகள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG