அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 30 ஜூலை, 2010

அவிசாவளையில் இரு பிள்ளைகளை சித்திரைவதைக்குள்ளாக்கிய தாய் விளக்கமறியலில்

அவிசாவளைப் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளையும் சித்திரைவதைக்குள்ளாக்கிய தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

குறித்த தாயார், ஐந்து மற்றும் ஒன்றரை வயதுடைய அப்பிள்ளைகளின் கைகள் மற்றும் உடலில் சூடாக்கப்பட்ட இரும்பை வைத்து துன்புறுத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையார் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த தாயார் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இந்நிலையில் குறித்த சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG