யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 4ஆம் வருட மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 25) சுண்டுக்குளியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனான கலிஸ்ரஸ் கஜேந்திரன் (வயது 25) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதியுள்ளவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மாணவர்கள் இருவரின் சடலங்களும் மரண விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவன் பலியானதை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தில் தோரணங்கள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 26 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக