இலங்கை வரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் விதத்தில் நுவரெலியா நீர் ஏரிகளில் ஆடம்பர படகு வீடுகள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை முதலீட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இலங்கை முதலீட்டுச் சபைக்கும் ஹோட்டல் சேவை நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப முதலீடாக 55 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் பின்னர் இதனை 100 மில்லியன் ரூபாவாக அதிகரி;க்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனம் ஒன்று இந்த ஆடம்பர படகுகளை உருவாக்கும். 100 அடி நீளமும் 20 அடி அகலமும் 16 அடி உயரமும் கொண்டதாக பலகைகளினால் இந்த படகுகள் தயாரிக்கப்படும். இவற்றில் இயந்திரங்களும் பொருத்தப்படும்.
சொகுசான படுக்கையறைகள் சாப்பாட்டறை ஹோல். மற்றும் மேல் பகுதியில் 100 பேர் அமரக்கூடிய இருக்கைகள் கொண்டதாக இவை உருவாக்கப்படும். இப்படகு வீடுகளின் உதிரிப்பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இங்கு பொருத்தப்படும். உல்லாசப் பயணிகளுக்குத் தேவையான அத்தனை வசதிகளும் இப்படகில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 1 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக