அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 ஜூலை, 2010

இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்வு.

இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்திட்டங்கள் குறித்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

இந்தக் கலந்துரையாடல் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் 2011ஆம் 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையால் செயற்படுத்தப்படவுள்ள செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
திட்ட விளக்கங்களை அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி எடுத்து விளக்கினார். அத்துடன் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பிரகாரமே திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அதற்கேற்ப துறைசார் நிபுணர்கள் செயற்திட்ட அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்கும் படியும் செயலாளர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சின் ஆலோசகர் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர்.







0 கருத்துகள்:

BATTICALOA SONG