அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 31 ஜூலை, 2010

வொய்ஸ் ஒப் ஏஸியா ஊடக நிறுவனம்மீதான தாக்குதலுக்கு புளொட் கண்டனம்

 லங்கையில் பிரபல வானொலி ஒலிபரப்பு நிறுவனமான வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க்கின் சியத்த எப்.எம்., றியல் ரேடியோ, வெற்றி எப்.எம் ஆகியவற்றின் செய்திப்பிரிவுமீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை புளொட் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இவ்வாறாக ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயற்பாடானது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமென்று புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையானது ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே நாம் கருதுகிறோம். கடந்த காலங்களில் இவ்வாறான பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. இத்தகைய மிலேட்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான வொய்ஸ் ஒப் ஏஸியா நெட்வேர்க நிறுவனத்திற்கும், பணிப்பாளர், ஊழியர்கள் ஆகியோருக்கும் ஆழ்ந்த கவலைகளைக் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் புளொட் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG