அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 28 ஜூலை, 2010

பொலிஸாரின் பாலியல் வல்லுறவு குறித்து விசாரிப்பதற்கு விசேட இராணுவக் குழு

பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண்ணொருவர் செய்த புகார் தொடர்பாக விசாரிப்பதற்கு தியத்தலாவ இராணுவ பொலிஸாருக்கு உதவுவதற்காக விசேட புலனாய்வுக் குழுவொன்றை இராணுவம் நியமித்துள்ளது.

இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், விசாரணைகள் இன்னும் நடைபெறுவதால் அது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கூற முடியாது எனவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் யூ.ஏ.பி. மெதவல இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
கடந்த மாதம் தனது காதலருடனான பிரச்சினை குறித்து புத்தல பொலிஸில் புகாரிடச் சென்றபோது அங்கிருந்த மூன்று பொலிஸார் தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாக மேற்படி பெண் புகாரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG