வாகரை பனிச்சன்கேணி காட்டுப் பகுதியில் ஆர்.பீ.ஜீ மற்றும் மோட்டார் ரக குண்டுகள் உட்பட 7.62 ரக தோட்டாக்கள் 300 என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த வெடி பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான பிரிஷாந்த ஜயக்கொடி கூறினார்.
கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருள்களில் பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட மோட்டார் மற்றும் ஆர்.பீ.ஜீ குண்டுகளை இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் செயலிழக்கச் செய்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக