நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன்ஸ்வீக் மொட்டிங்ஹோம் தோட்டத்தில் நேற்று இரவு இடம் பெற்ற சம்பவமொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 38 வயதான தேவம் ஞானமூர்த்தி என்பவராவார். கொலை செய்யப்பட்ட தேவம் ஞானமூர்த்திக்கும் அவரின் அயலவர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்டத் தகராறு ஒன்றின் காரணமாக ஆத்திரத்துக்கு உள்ளான அயலவர், கவ்வாத்து கத்தியொன்றினால் தேவம் ஞானமூர்த்தியின் கழுத்துப்பகுதியில் வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. ஞானமூர்த்தியை வெட்டியவர் உடனடியாக தலைமறைவாகிய போதும் மஸ்கெலியா பொலிஸார் இன்று காலை அவரை செய்துள்ளனர்.
கொலைச்சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு அட்டன் நீதிமன்ற நீதிவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டார.; அத்துடன் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 24 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக