மலேசியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தங்கியிருப்பது குறித்து தாம் கண்டுபிடித்திருப்பதாக மலேசியப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி கருதி மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் மலேசியப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, இதனை உறுதிப்படுத்தியுள்ள மலேசிய உள்விவகார அமைச்சர் ஹிஷாமுடின் ஹுஸைன், இஸ்லாமிய மற்றும் ஏனைய போராளிக் குழுக்கள் தமது வன்முறைச் சம்பவங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மலேசிய நாட்டை பயன்படுத்துவதாகவும் கூறினார்.
அத்துடன், தகவல் பரிமாற்றம், ஆட்களை இணைத்தல், நிதி விவகாரம் ஆகியவற்றுக்கும் இவர்கள் தென்கிழக்கு ஆசியாவைப் பயன்படுத்தி வருவதாகவும் மலேசிய உள்விவகார அமைச்சர் தெரிவித்தார்.
இஸ்லாமிய மற்றும் ஏனைய போராளிக் குழுக்களின் ஆட்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் மாணவர்களே இலக்கு வைக்கப்படுவதாகவும் மேலும் அவர் கூறினார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 16 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக