அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 ஜூன், 2010

மீளக்குடியேறிய கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர் - ஆளுநர் தகவல்


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் மீளக்குடியேறியவர்களில் பாடசாலை மாணவர்கள் 500 பேர் வரையில் நாட்டின் பல பகுதிகளுக்குமான கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கல்வி சுற்றுலாவானது வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்ததுடன் மாணவ மாணவிகளுடன் 75 ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மீளக்குடியமர்ந்த மக்களின் பிள்ளைகள் தற்சமயம் அதிகளவில் பாடசாலைக்கு வருகை தருகின்றனர். அப்பிள்ளைகளின் உளவியலை மேம்படுத்தும் முகமாகவும் கல்வியில் அவர்களை மீண்டும் ஈடுபாடு கொள்ளச் செய்யும் வகையிலும் இந்த கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG