அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 13 ஜூன், 2010

புலம்பெயர் தமிழர்களின் ஈழக் கனவினால் இலங்கைத் தமிழர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர்- டக்ளஸ்

புலம்பெயர் தமிழர்களின் ஈழக் கனவினால் இலங்கை தமிழர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழீழம் ஒன்றை அமைப்பதற்காக பிரபாகரன் கடுமையாக முயன்று இறுதியில் தோல்வி கண்டார். அவரால் முடியாததை புலம் பெயர் தமிழர்களால் எவ்வாறு செய்ய முடியும் எனவும் புலம்பெயர் தமிழர்களின் இவ்வாறன செயற்பாடுகளால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதிக்கப்படுகிறார்கள் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ இலங்கையில் தமிழீழத்தை அமைக்க முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டு புலம் பெயர் தமிழர்கள் செயற்பட வேண்டும் எனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து புலம்பெயர் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG