அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 16 பிப்ரவரி, 2013

காலநிலை பாதிப்பும் அதனூடான விவசாய முறைமை மாற்றமும் தொடர்பாக முக்கிய கூட்டமொன்றிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு.

ற்சமயம் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலைமை மாற்றங்கள் காரணமாக விவசாயத் துறையில் ஏற்படும் பாதிப்புக்கள் அதற்கான மாற்றுவழிகள் தொடர்பாக ஆராய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.வடபகுதியில் தற்சமயம் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் காரணமாக விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் பெரும் நட்டத்தினையும் அடைந்து வருகின்றனர். இவை தொடர்பாக குடாநாட்டின் விவசாய பிரதிநிதிகள் பலரும் அமைச்சரவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கோப்பாய் மகாவித்தியாலய மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடல்


பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கோப்பாய் மகாவித்தியாலய அதிபர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஜனாதிபதியின் யாழ்.விஜயம்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பை ஏற்று மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

வியாழன், 7 பிப்ரவரி, 2013

தொண்டர் ஆசிரியர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை….

டமாகாணத்தில் வலயரீதியாகவும் பாடரீதியாகவும் தொண்டராசிரியர்களாக கடமைபுரிவோருக்கு நிரந்தர ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

'காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே டக்ளஸ் மீது குற்றச்சாட்டு'

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில், சம்மேளனத்தினை வழிநடத்தும் சிலரின் அரசியல் உள்நோக்கத்தினையும் கொண்டுள்ளதென யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களான ஷெய்க் ஏ.எஸ்.சுபியான் மற்றும் சரபுல் அனாம் ஆகியோர் கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

தமிழ்பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அவர்களுடனான விஷேட சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எடுத்துரைப்பு!

.பி.டி.பி (ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)யின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அரசியல் மற்றும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து எடுத்து விளக்கியுள்ளார்.

திங்கள், 28 ஜனவரி, 2013

எனதும் எனது கட்சிமீதும் மேற்கொள்ளப்பட்ட களங்கங்களை முதலில் உதயன் பத்திரிகை நீதிமன்றில் நியாயப்படுத்தட்டும். அதன் பின்னர் சமரசம் குறித்து ஆலோசிக்க தயாராக இருக்கின்றேன். - நீதிமன்றில் அமைச்சர் தேவானந்தா.

னதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச்செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடுத்த ஆயிரம் (1,000) கோடி ரூபா கோரும் மானநஷ்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வெள்ளி, 25 ஜனவரி, 2013

வடமாகாண பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுசென்றார்

வடபகுதியில் பின்தங்கியதும் பாதிக்கப்பட்டதுமான பாடசாலைகளின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் மூலதனச்செலவுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஆயிரம் பாடசாலைகள் முன்னோடித் திட்டத்தின்கீழ் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள் ஊடாக நிரப்ப அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை.

நாட்டில் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் ஆயிரம் பாடசாலைகள் முன்னோடித் திட்டத்தின்கீழ் ஆசிரிய சேவை வெற்றிடங்களை பட்டதாரிகள் ஊடாக நிரப்புவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

யாழ்.பல்கலைக் கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் அமைச்சர் ஆலோசனை

யாழ்.பல்கலைக் கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஒழுங்காகவும் சீராகவும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களை விடுவிப்பதற்கு முயற்சி மேற்கொள்வேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சில் அதன் அமைச்சர் எஸ்.பி திஸநாயக்கா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

திங்கள், 19 நவம்பர், 2012

வடக்கு மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யவில்லை அபிவிருத்தி முடக்கத்திற்கும் அரசியல் தீர்வின்மைக்கும் அதுவே காரணமென்கின்றார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வி

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

இந்திய அரசுதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: அமைச்சர் டக்ளஸ்


1986ஆம் ஆண்டு சென்னையில் கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆயுதங்களை எங்களுக்கு இந்திய அரசுதான் வழங்கியிருந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

வடகடல் நிறுவனத்தினது முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் தலைமையில் ஆராய்வு

பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான வடகடல் நிறுவனத்தினது செயற்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

5000 மீனவர்களுடன் படகு மூலம் இந்தியா செல்ல அமைச்சர் டக்ளஸ் தீர்மானம்


லங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக படகு மூலம் இந்தியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

புதன், 22 பிப்ரவரி, 2012

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜெனீவா பயணம்!


விற்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்றிரவு ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ளார்.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

'பிரச்சினை தீர்க்கப்பட்டால் அரசியல் செய்யமுடியாது என்பதால் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் இணைய மறுக்கின்றனர்'


நாடாளுமன்ற தெரிவுக் குழு ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும். த.தே.கூட்டமைப்பினர் நாடாளுமன்ற தெரிவுக் குழவில் இணைந்து கொண்டால் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும.; ஆனால் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் இணைந்து பிரச்சினை தீர்க்கப்பட்டால், அவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதால் இணைய மாட்டார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தெரிவுக்குழுவில் கூட்டமைப்பினர் இணைந்துகொள்ள வேண்டும்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஞாயிறு, 12 ஜூன், 2011

அரசியல் தீர்வுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு வேண்டும் : இந்திய தூதுக்குழுவிடம் அமைச்சர் டக்ளஸ்

ரசியல் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியவெளிவிவகார செயலாளர் நிருபமாக ராவ் ஆகியோர் ஆடங்கிய இந்திய உயர் மட்ட தூதுக்குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 4 மார்ச், 2011

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன் பிணை மறுப்பு

மைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பிணையில் விடுவிக்க முடியாத பிடியாணையொன்று பிறப்பிக்கப்பட்டதனால், அவர் சென்னை மேல் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அமைச்சர் டக்ளஸுக்கு முன்பிணை வழங்க இந்திய பொலிஸார் எதிர்ப்பு

மிழகத்தின் சூளைமேடு பொலிஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள ஒரு கொலை வழக்கு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்பினை வழங்குவதற்கு இந்திய பொலிஸார் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்

வியாழன், 9 டிசம்பர், 2010

அமைச்சர் டக்ளஸ் குற்றவாளியல்லர் :சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

ந்தியாவால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி அல்லர் என்று சென்னை மேல்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

BATTICALOA SONG