அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 19 ஜூன், 2010

தென் மாகாண பஸ் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

தென் மாகாண பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பஸ் கட்டண மாற்றங்கள் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் தென் மாகாண சபை முதலமைச்சர் ஷான் விஜயலால் குறிப்பிட்டுள்ளார்.
பஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தென் மாகாண சபை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பயணத்தூரத்தை அடிப்படையாகக் கொண்டு, தென் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் ஊடாக பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இதன்படி, தென் மாகாணத்தின் 388 மார்க்கங்களில் 221 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தவிர, 54 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண சபை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தென் மாகாணத்திலுள்ள 113 மார்க்கங்களின் பஸ் கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

BATTICALOA SONG