அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 18 ஜூன், 2010

நீதிமன்ற உத்தரவை மீறியும் புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள்

புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் சார்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபரான செல்வராசா டிலான் என்பவரை கடந்த மே மாதம் 20ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமுக்கு புனர்வாழ்வுக்காக அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அவர் இன்னமும் அனுப்பப்படவில்லை என்றும் மேற்படி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி மேற்படி இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு நீதிவான் ஆர்.இளஞ்செலியன் உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG