பெற்றோலிய எரிபொருள் வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் இன்றைய தினம் (19) யாழ்.பெற்றோலிய கூட்டுத்தாபன பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் மிக விரைவில் யாழ்ப்பாணத்தில் புதிய பெற்றோலிய களஞ்சியசாலை ஒன்று நாவற்குழியில் அமையவுள்ளதாகவும் புதிதாக மன்னார் மாங்குளம் கிளிநொச்சி பளை ஆகிய பகுதிகளில் எட்டு எரிபொருள் நிலையங்கள் இரு வாரங்களில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related Posts : epdp
0 கருத்துகள்:
கருத்துரையிடுக