அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 மே, 2010

தோல்விக்கு இரவு விருந்துகளே காரணம்- டோணி


20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ஐபிஎல் இரவு விருந்துகளே காரணம என்று இந்திய அணியின் கேப்டன் டோணி கூறியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
சூப்பர் 8 சுற்றில் எப் பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா , முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடமும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடமும் தோற்றது. கடைசி ஆட்டத்தில் இலங்கை யிடம் தோல்வியைத் தழுவி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இங்கிலாந்தில் நடந்த கடந்த உலக கோப்பையிலும் இந்திய அணிக்கு இதே நிலைதான் ஏற்பட்டது.இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் போனது குறித்து கேப்டன் டோனி கூறுகையில்,
ஐ.பி.எல். போட்டிகளின்போது தொடர்ந்து மிக அதிகமான பயணங்களை மேற்கொண்டது, இரவு விருந்து நிகழ்ச்சிகள் ஆகியவை தான் இந்தத் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டன.
ஐ.பி.எல். இரவு விருந்து நிகழ்ச்சிகள் வீரர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டது. இந்த உலக கோப்பையில் நாங்கள் முழு திறமையுடன் ஆடவில்லை. இலங்கை அணி கடைசி 5 ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசியது என்றார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG