அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகாமையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக சம்மாந்துறைப் பொலீசார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் காரைதீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த 38வயதான சதாசிவம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமற் போயிருந்ததாகவும், இவர் மன நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தவரென்றும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே குறித்தநபர் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் காரைதீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 12 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக