செயற்திறன் மிக்க எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் எழுந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தங்களது கடமையை உணர்ந்து செயலாற்ற வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சிகள் செயற்திறனாக கடமையாற்றினால் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்றும் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அவர்கள் கடமையாற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.ஜனவரி 27ம் திகதி மற்றும் ஏப்ரல் 8ம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன என்றும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சிக்காமல் எவ்வாறு மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக