அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 11 மே, 2010

நளினியுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கையர் இருவர் கைது!


முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பிலான வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி நளினி தம்வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு வைத்திருந்த இலங்கையர் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் தம்வசம் வைத்திருந்த கைத்தொலைபேசியின் ஊடாக இலங்கையில் உள்ள இரண்டு பேருடன் தொடர்பு வைத்திருந்ததாகத் கூறப்படுவதோடு, அவ் இவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொலைபேசியூடாக தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் குணசிங்கபுரத்தைச் சேர்ந்த நாகம்மா ஆகியோரே கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற நாகம்மா மற்றும் வெற்றிவேல் ஆகியோர் நண்பர்கள் எனவும் அவர்கள் இருவருடனும் நளினி நீண்டநாட்களாகத் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்களுடன் நளினி பேசிய விடயங்களைப் பரிசீலிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


0 கருத்துகள்:

BATTICALOA SONG