வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 ஏப்ரல், 2010
தோல்வியடைந்தோருக்கு துன்பம் விளைவிக்காது வெற்றியைக் கொண்டாடுங்கள்!
எமது தாய் நாடு எதிர்நோக்கும் சகலவிதமான சவால்களையும் முறியடிக்கக்கூடிய பலமிக்க பாராளுமன்றம் ஒன்றை அமைக்க உதவுமாறு இலங்கை மக்களாகிய உங்களிடம் நான் கோரிக்கை விடுத்தேன்.
அந்த வகையில் மூன்று தசாப்தங்கள் காணாத வரலற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பாராளுமன்றப் பொதுத் தேர்தல் மூலம் நீங்கள் ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டணிக்குப் பெற்றுத்தந்துள்ளீர்கள்.
கிடைத்துள்ள இந்த மகத்தான வெற்றி மஹிந்த சிந்தனை கருத்திட்டத்துக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் வழங்கும் அங்கீகாரம் என்றே நான் கருதுகிறேன். இலங்கையராகிய நீங்கள் தாய் நாட்டுக்காக உங்கள் கடமையை சிறப்பாக நிறைவேற்றியுள்ளீர்கள். என்மீதும் எனது கட்சிமீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை கௌரவத்துடன் பாதுகாப்பது எமது கடமை. இது உலக நாடுகள் மத்தியில் இலங்கையை ஒரு முன்னுதாரண நாடாக மாற்றுவதற்கு ஒரு வியக்கத்தக்க நடவடிக்கை என நான் நம்புகிறேன்.
இலங்கை சிறுவர் பரம்பரைக்காக உன்னதமான நாடொன்றை உருவாக்குவதே இந்த வெற்றியின் மூலம் பாராளுமன்றம் செல்லும் பிரதிநிதிகளின் மகத்தான பொறுப்பாகும். எனவே இந்த இலக்கை அடைந்து கொள்வதற்காக கைகோர்த்து ஒன்றிணையுமாறு சகல அரசியல் கட்சிகளிடமும் நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பாரிய வெற்றியைப் பெற்றுத்தந்த இலங்கை மக்கள் அனைவருக்கும் தேர்தலை சிறப்பான முறையில் நடத்திய தேர்தல் ஆணையாளருக்கும் சகல அரசாங்க ஊழியர்களுக்கும் முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தேர்தலில் போட்டியிட்ட சகல கட்சி வேட்பாளர்களுக்கும் அத்துடன் பொறுப்புடன் கடமையாற்றிய சகல ஊடகங்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக