பொதுத் தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட வாக்கெடுப்பு வாக்குப்பெட்டிகள் தற்போது மாவட்ட வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இந்த வாக்குப்பெட்டிகளுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் கடமை புரியும் தேர்தல் கடமை உத்தியோகத்தர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாதுகாப்புடன் செல்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரச ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இம்முறை மாவட்டத்தில் 314 தேர்தல் பிரிவுகளில் 362 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. தேர்தல் கடமைக்கென சுமார் 6000 பேர் வரை ஈடுபடுத்தப்படவுள்ளனர். 5 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 3 லட்சத்து 33 ஆயிரத்து 644 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 7 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக