அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 7 ஏப்ரல், 2010

புளொட் தலைவர் மற்றும் புளொட்டின் சர்வதேச கிளை முக்கியஸ்தர்கள் பாண்டியன்குளம் பகுதிக்கு விஜயம், விவசாய நடவடிக்கைக்கு நோர்வே ராஜன் நிதியுதவி- (புகைப்படங்கள் இணைப்பு

புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட் அமைப்பின் சர்வதேச கிளை முக்கியஸ்தர்கள் இன்றையதினம் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மல்லாவி, பாண்டியன்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது பாண்டியன்குளம் யுகசக்தி அமைப்பின் ஊடாக (மகளிர் அமைப்பு) 300 ஏக்கர் நெற்பயிற் செய்கைக்கான விதைநெல் கொள்வனவிற்கென 09லட்சம் ரூபாய் நிதியுதவி புளொட் அமைப்பின் நோர்வே கிளை அமைப்பாளர் ராஜன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
தலா ஒரு ஏக்கர் வீதம் 300 பயனாளிகள் விதைநெல்லை கொள்வனவு செய்வதற்காக மேற்படி உதவித்தொகை யுகசக்தி அமைப்பின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் அமைப்பின் லண்டன், ஜேர்மன் கிளைகளின் முக்கியஸ்தர்களான தயா மற்றும் ஜெகநாதன் ஆகியோரும் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது











0 கருத்துகள்:

BATTICALOA SONG