நாட்டின் நீதித்துறை சீர்குலைந்துள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான சட்ட விதிகள் அமுல்படுத்தப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
|
Related Posts : நீதியரசர் சரத் என் சில்வா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக