அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 10 ஏப்ரல், 2010

புதிய அமைச்சரவைத் தொடர்பில் ஜனாதிபதி உயர்மட்ட ஆலோசனை

ஏழாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியதை அடுத்து புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.
தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதியானவுடனேயே ஜனாதிபதி இந்த ஆலோசனையை ஜனாதிபதி மாளிகையில் வைத்தே நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையைக் குறைத்து மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கைத் துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலேயே அவர் கலந்துரையாடியதாகவும் அதில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் கலந்துகொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்-சிங்கள புதுவருட புத்தாண்டுக்குப் பின்னர் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்வதற்கு ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

BATTICALOA SONG