அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

முன்கூட்டியே விடுதலை – நளினி மீண்டும் அப்பீல் மனு தாக்கல்

சென்னை: முன்கூட்டியே விடுதலை கோரி போராடி வரும் நளினி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி கடந்த 19 வருடங்களாக சிறையில் அடைபட்டுள்ளார்.
இநத நிலையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அவர் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் அப்பீல் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த அப்பீல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய சிறை ஆலோசனைக் குழுவை அமைத்து நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நளினியிடம் விசாரணை நடத்திய வேலூர் கலெக்டர் தலைமையிலான சிறை ஆலோசனைக் குழு தனது பரிந்துரையை தமிழக அரசுக்கு அளித்த்து.
அதைப் பரிசீலித்த தமிழக அரசு, நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதில்லை என்ற முடிவை எடுத்து உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இதைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம், நளினிக்குப் பொது மன்னிப்பு வழங்க இயலாது என்று கூறி அவரது மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நளினி சார்பில் மீண்டும் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையை ரத்து செய்து உத்தரவிடுமாறும், தன்னை விடுதலை செய்யுமாறும் கோரியுள்ளார் நளினி.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG